ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm
author img

By

Published : Jan 25, 2021, 9:11 PM IST

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரிக்க உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலை, ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் சரிபார்த்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் வரும் 2ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

சசிகலா விடுதலை காலதாமதம் ஆகுமா? - வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னை: உடல் நிலை போன்ற பல்வேறு காரணிகளால் சசிகலா குறித்த தேதியில் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது, தமிழ்நாடு அரசியல் களத்தை மீண்டும் பரபரக்கச் செய்திருக்கிறது.

'நாளை மறுநாள் சசிகலா விடுதலை'- டிடிவி தினகரன் ட்வீட்

நாளை மறுநாள் சசிகலா விடுதலையாகிறார் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

குடியரசு தின விழா:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படுவதையொட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 திரும்பப் பெறும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி

பழைய வரிசை ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

அரசு மருத்துவர்களின் அலட்சியம்... கால் முழுவதும் பரவிய புற்றுநோய் - மகனை காப்பாற்ற பரிதவிக்கும் ஏழை தந்தை!

திருநெல்வேலி: புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள் அலட்சியத்துடன் இருந்ததால் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சசிகலா சாதாரண வார்டுக்கு மாற்றம்!

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விகே சசிகலா அவசர சிகிச்சைப் பிரிவு வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது

விவசாயிகளை அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது - ராகுல் காந்தி

கரூர்: விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது என கரூரில் விவசாயிகளுடனான சந்திப்பின்போது ராகுல் காந்தி தெரிவித்தார்.

வலிமை 'தல'க்கு ஓபனிங் பாடிய யுவன்?

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஓபனிங் பாடல் பாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேஷ் பாபுடன் இணைந்த 'மகாநடி': படப்பிடிப்பு தொடக்கம்!

மகேஷ் பாபு - கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதியப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.