ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am
author img

By

Published : Mar 23, 2021, 9:13 AM IST

’கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு எங்க ஆட்சியில் இவ்வளவு, இப்போ எவ்வளவு...’ - கலந்துரையாடிய ஸ்டாலின்

நேற்று (மார்ச்.22) ராமநாதபுரம் பரப்புரைக் கூட்டத்தில் பால், பருப்பு, கேஸ் ஆகியவற்றின் விலை எவ்வளவு என்று தொண்டர்களிடம் கேட்டறிந்து, சுவாரஸ்யமாக கலந்துரையாடி ஸ்டாலின் வாக்கு சேகரித்த விதம் அங்கிருந்த வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம்

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம், பஞ்சமி நிலம் மீட்பு என பல முக்கிய அம்சங்களைக் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை, நேற்று (மார்ச்.22) வெளியிடப்பட்டது.

’மொத்த நாட்டையும் சரி செய்வதற்காக வந்திருக்கிறேன்’ - சீமான் நம்பிக்கை

சென்னை: ஊர் எல்லையில் அய்யனார் போல மக்களைக் காப்பேன் என உறுதியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியை மட்டுமல்ல, மொத்த நாட்டையும் சரி செய்வதற்காகவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம்: தலைமை நடவடிக்கை

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட மூன்று நிர்வாகிகளை, அதிமுக தலைமைக்கழகம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.

’மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கித் தருவோம்’ - டிடிவி தினகரன் உறுதி

மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டில் ஒருவருக்கு வேலை தருவோம் என்றும் ஊழலற்ற ஆட்சி, அனைவரும் நிம்மதியாக வாழும் சூழலை அமைத்து தருவோம் என்றும் குளித்தலையில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

’கடந்த காலமும் நல்ல காலமே, வரும் காலமும் நல்ல காலமே’ - அதிமுக ஆட்சியைப் புகழ்ந்த ராமதாஸ்

”கடந்த நான்கு ஆண்டுகள் நல்ல காலமே, வரும் காலமும் நல்ல காலமே” என நேற்று (மார்ச் 22) நெய்வேலியில் நடந்த பரப்புரையில் ராமதாஸ் அதிமுக ஆட்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

’வாக்குறுதியை நிறைவேற்றியவர் ஜெயலலிதா, வாக்கு தவறியவர் கருணாநிதி’ - கே.சி.பழனிசாமி

”ஒரு தேர்தலில் தோல்வியே தழுவினாலும் அடுத்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி வெற்றியே பெற்றாலும் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்” என அமைச்சர் கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

’திமுக எங்கள் பொறுமையை சோதித்தால் இனி நடப்பது வேறு’ - அண்ணாமலை எச்சரிக்கை

”கரூர்: பரப்புரையின்போது பாஜகவினர் சிலர் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ”திமுகவினர் எங்கள் பொறுமையை சோதித்துப் பார்த்தால் இனி நடப்பது வேறு” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

மாஸ்க் தேடி அலைந்த பயணிகள்...பேருந்துகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு

சென்னை: பேருந்துகளில் அமர்ந்துள்ள பயணிகள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

’ஒத்த செருப்பு படத்துக்காக பேராசைப்பட்டேன்’ - தேசிய விருது குறித்து பார்த்திபன்

”சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் இந்தப் படத்துக்கு கிடைக்கணும் என பேராசைப்பட்டேன். அதற்கான உழைப்பும் கொடுத்தேன். ஆனால் தனித்தனியாக தராமல் ஒட்டுமொத்தமாக சிறந்த ஜூரி விருது கிடைத்திருப்பது சந்தோஷம். கூடவே ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி” - நடிகர் பார்த்திபன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.