ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்!
ராஜஸ்தான்: மீண்டும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அஜ்மீர், பில்வாரா ஆகிய ஆறு பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி: தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை தனலட்சுமிக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
’இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பில்லை’ - வைகோ பேச்சு
திருப்பூர் : பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதிமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட வைகோ, “இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பில்லை” என்றார்.
’மா.பா பாண்டியராஜன் அல்ல, மாஃபியா பாண்டியராஜன்’ - ஸ்டாலின் தாக்கு
திருவள்ளூர் : ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளுர், திருத்தணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆவடியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மா.பா பாண்டியராஜன் அல்ல, மாஃபியா பாண்டியராஜன்” என தாக்கிப் பேசியுள்ளார்.
’பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்' - எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்எல்ஏ வாக்குறுதி
விருதுநகர்: பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்க உள்ளதாக சாத்துார் தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
’ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
திருவண்ணாமலை: அதிமுக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் சேவைக் ராமச்சந்திரனை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
இரட்டை இலை வடிவில் சிகை அலங்காரம் செய்து வாக்கு சேகரிக்கும் அதிமுக தொண்டர்!
கோயமுத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஜெயராம் போட்டியிடுகிறார். இந்நிலையில் உடையாம்பாளையம் 66 ஆவது வார்டைச் சேர்ந்த அதிமுக பேரவை தலைவர் கோபால், தனது தலையில் இரட்டையிலை போல் சிகை அலங்காரம் செய்து, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கட்சியின் சின்னத்தை சிகை அலங்காரமாக்கி ஆதரவு திரட்டி வரும் கோபாலை அனைவரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ - ஆ.ராசா புகழாரம்!
ஈரோடு: புன்செய் புளியம்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ எனப் புகழாரம் சூட்டினார்.
'அன்பான சர்வாதிகாரமே எங்கள் நிர்வாகம்’ - சீமான்
மதுரை: தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரமே எங்கள் நிர்வாகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வயதானவர்களுக்கு கல்வி போதிக்கும் தன்னார்வக் குழு!
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டம் சிரோர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணிகளை முடித்த பின்னர், திறந்த வெளி பாட சாலைகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். படிப்பதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை சிரோர் கிராம மூதாட்டிகள் மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளனர்.