ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ....

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am
author img

By

Published : Mar 19, 2021, 9:18 AM IST

நீர்ப்பறவையை போல நீருக்கு மேலே பறக்கும் கடல் விமானம்

பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், உடுப்பி இளைஞர்களுடன் இணைந்து மைக்ரோ-லைட் கடல் விமானத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவின், முதன்முதலாக இறக்குமதி செய்யப்பட்ட கடல் விமானத்தை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அந்த வரிசையில் தற்போது புஷ்பராஜ் கண்டுபிடித்த விமானமும் இணைந்துள்ளது. இந்த மைக்ரோ-லைட் கடல் விமானத்தை உருவாக்க புஷ்பராஜூக்கு 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. சரியான திட்டமிடல், விடா முயற்சி, ஆர்வம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு புஷ்பராஜ் மிகச்சிறந்த சான்று.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 14 ஆண்டு சிறை தண்டனை, 60 ஆயிரம் ரூபாய் அபராதம்

புதுக்கோட்டை : பெற்ற மகளை நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தைக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது

சேலம்: போலி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனம் நடத்தி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 2 கோடி பணம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

புதுச்சேரி: உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

'கெடுத்து பழக்கமில்லை, கொடுத்துதான் பழக்கம்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘கோவில்பட்டி மக்களுக்கு கெடுத்து பழக்கமில்லை, கொடுத்துதான் பழக்கம்' எனக் கூறி டிடிவி தினகரனை சாடினார்.

'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக’ - சீமான் தாக்கு

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான், ‘'பிஜேபி காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பிஜேபி’ என விமரசித்தார்.

தேர்தல் விதிமுறை மீறல்: செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்!

கரூர் : தேர்தல் விதிமுறைகளை மீறியதாக செந்தில் பாலாஜி மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்துள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலர், எஸ்பிக்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட எஸ்பிக்களுடன் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

'ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தாருங்கள்' - கமல் பேச்சு

ஈரோடு: பவானி சாகர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கமல், 'ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தாருங்கள்' எனக் கூறினார்.

'தேன்' படத்திற்கு கட்டணச் சலுகை அளித்த பிரபல சினிமா நிறுவனம்!

சென்னை: பல்வேறு விருதுகளை பெற்ற 'தேன்' படத்திற்கு கட்டணச் சலுகை அளித்து ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் பெருமைப்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.