ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்
ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்
author img

By

Published : May 3, 2021, 5:31 PM IST

'ஜனநாயகத்தை மதிக்காத அதிமுக, பாஜக கூட்டணியை நிராகரித்தற்கு நன்றி' - முத்தரசன்

சென்னை: ஜனநாயகத்தை மதிக்காத அதிமுக, பாஜக கூட்டணியை நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்ததற்கு நன்றி என முத்தரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் அடைந்த தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக கேட்டறிந்தார்.

கொங்கு மண்டலத்தால் தப்பித்த அதிமுக - பின்னணி என்ன?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. குறிப்பாக, கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி ஸ்வீப் செய்தது. அம்மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கூட திமுக கூட்டணியால் வெற்றிப்பெற முடியவில்லை.

ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்

தேனி: புதிதாக ஆட்சி பொறுப்பில் அமரவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பொறுப்புகளை உணர்ந்து அரசு கடமைகளை ஆற்றிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிவசேனாபதிக்கு அதிர்ச்சி தோல்வியளித்த எஸ்.பி.வேலுமணி!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.

ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்துக்கொண்ட பெண்

ராமநாதபுரம்: ஸ்டாலின் முதலமைச்சரானால் நாக்கை அறுத்துக் கொள்வதாக வேண்டுதல் வைத்த பெண், அவர் வெற்றி பெற்றதை அடுத்து அதை நிறைவேற்றியுள்ளார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்' - விஜயகாந்த்

சென்னை: மக்களின் தீர்ப்பை மனதார ஏற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

' திமுகவால், மதிமுகவுக்கு வெற்றி ' - வைகோ

திமுகவால், மதிமுகவுக்கு வெற்றி கிடைத்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இரும்பு கோட்டையாகத் திகழும் கொங்கு... கெத்து காட்டிய அதிமுக!

கோவையில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி, கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

சீமான் தோல்வி: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வியைத் தழுவியது. திருவெற்றியூரில் போட்டியிட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தோல்வியைத் தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் திமுக, அதிமுக ஆகிய பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.