ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv-bharat-top-ten-news-five-pm
etv-bharat-top-ten-news-five-pm
author img

By

Published : Apr 24, 2021, 4:31 PM IST

'4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக அனுப்ப நடவடிக்கை'

சென்னை: தமிழ்நாட்டிற்கு நான்கு லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்ததாகவும், மாவட்ட வாரியாக அவை அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் காலாவதியான ரெம்டெசிவிர்?

தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருக்கும் சூழலில், சேலம் மருத்துவமனையில் நடந்திருக்கும் இந்த அவலம் அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

கொளுத்தும் வெயிலில் 180 கி.மீ. பயணம்: கரோனா காலத்தில் கடமை தவறாத பெண் மருத்துவர்

அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூருக்குத் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணம்செய்து கோவிட்-19 பாதிப்புக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளார் பிரக்யா கதே.

'இந்தியாவுக்கு உதவுங்கள்' - ஜோ பைடனுக்கு அழுத்தமளிக்கும் அமெரிக்கர்கள்!

கோவிட்-19ஆல் தவிக்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் என அந்நாட்டில் அழுத்தம் அளிக்கப்படுகிறது.

1 ரூபாய்க்கு உயிர்காற்று: உ.பி. தொழிலதிபரின் தயாள குணம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் குப்தா ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரில் காற்றை நிரப்பித் தருகிறார்.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 2 லட்சம் கரோனா தடுப்பூசி

ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன.

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் இன்றும் நாளையும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை: கறுப்புக் கொடிகட்டி எதிர்ப்பு

திண்டுக்கல்: கரோனா வைரஸ் (தீநுண்மி) ப‌ர‌வ‌ல் எதிரொலியால் கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளிகளின் வ‌ருகைக்குத் த‌டைவிதிக்க‌ப்பட்ட‌து.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் செங்கல் சூளைகள்; குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள்!

கோவை: தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் சீல் வைக்கப்பட்டதால், தொண்டாமுத்தூர் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு செம்மண் எடுக்கப்படுவது சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

'வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்' திமுக மனு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தக்கோரி தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.