ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்!
ராஜஸ்தான்: மீண்டும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அஜ்மீர், பில்வாரா ஆகிய ஆறு பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சோபியான் என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் சிஏஏ அமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - பாஜக தேர்தல் அறிக்கை!
மேற்கு வங்கத்தில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
’காமராஜர் இருந்தால் பாஜகவை ஆதரிப்பார்’ - சீனிவாசன்
விருதுநகர்: “காமராஜரின் ஆசி பாஜகவிற்கு உள்ளது, விருதுநகரில் நிச்சயம் தாமரை மலரும்” என அச்சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி: தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை தனலட்சுமிக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலை வசதி இல்லை.. வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டம்!
கிருஷ்ணகிரி: உடுப்பிநாயகணப்பள்ளி கிராமத்தில் சாலை அமைத்து தராத அலுவலர்களைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிபெயரும் போராட்டம் நடத்தினர்.
’ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
திருவண்ணாமலை: அதிமுக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் சேவைக் ராமச்சந்திரனை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு உருப்படுமா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
’இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பில்லை’ - வைகோ பேச்சு
திருப்பூர் : பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதிமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட வைகோ, “இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பில்லை” என்றார்.
’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ - ஆ.ராசா புகழாரம்!
ஈரோடு: புன்செய் புளியம்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ எனப் புகழாரம் சூட்டினார்.
மேற்கு வங்கத்தில் சிஏஏ அமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - பாஜக தேர்தல் அறிக்கை!
மேற்கு வங்கத்தில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.