ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

author img

By

Published : Mar 16, 2021, 11:09 AM IST

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து

பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை

கடலூர்: துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த நபரைக் அடையாளம் காண காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வெளியிட்டுள்ளனர். நடுரோட்டில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது கத்தியால் அந்நபர் குத்தும் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குபதிவு நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை!

சென்னை: தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளருக்கு இவ்வளவு சொத்துகளா?

வேலூர்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அவரது மனைவி இருவரின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 29.62 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

'வாக்குறுதிகள் மட்டுமல்ல, மக்களுக்கு தேவையான திட்டங்களையும் நிறைவேற்றுவோம்' - ஜெயக்குமார்

சென்னை:அதிமுகவை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், மக்களுக்கு தேவையான மேலும் பல திட்டங்களையும் நிறைவேற்றும் என ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

பின்னலாடை நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்!

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

நெல்லையில் ஒரே நாளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (மார்ச் 14) பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.

விடுப்பு கேட்டு தத்துக் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த அங்கன்வாடி ஊழியர்!

தேர்தல் பணி நேரத்தில் விடுப்பு அளிக்கக்கோரி, தான் தத்தெடுத்த, பிறந்து சில நாள்களே ஆன கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அங்கன்வாடி ஊழியர் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒலிப்பெருக்கிகள், செல்போன்கள் பறிமுதல்: ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறையினர் நடவடிக்கை

சென்னை: அண்ணா சாலை பகுதியில் விலைப்பட்டியல் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள், செல்போன்கள்ஆகியவற்றை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் - ஆணையர் பி.கே.சக்சேனாவுடன் சிறப்பு நேர்காணல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது என, ஈடிவி பாரத் நடத்திய நேர்காணலில் சிந்து நதிநீர் ஆணையர் பி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.