ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news at 9 PM - இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 12, 2021, 9:08 PM IST

1. நடிகர் காளிதாஸ் காலமானார்!

நடிகரும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

2. உயிரிழந்த யானையும் அதன் அருகில் யாரையும் அனுமதிக்காத தாய் யானையின் பாசப்போராட்டமும்..!

முதுமலை புலிகள் காப்பகத்தில், புலி தாக்கி உயிரிழந்த 6 மாத யானையின் அருகில் வனத்துறையினரை நீண்ட நேரம் அனுமதிக்காமல், துரத்திய தாய் யானையின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3. சிவசங்கர் பாபா பிணை மனு - விசாரணையைத் தள்ளிவைத்த நீதிமன்றம்

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, பிணைகோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

4. சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5. பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நடிகர் விஜய் ஆகியோர் இன்று (ஆக. 12) சென்னையில் சந்தித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின்றன.

6. கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் - துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டருக்கு விருது

தமிழ்நாடு காவல் துறையைச் சோ்ந்த நான்கு பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட எட்டு ஆய்வாளர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7. தமிழ்நாடு பட்ஜெட் - பூவுலகின் எதிர்பார்ப்புகள் என்ன?

தமிழ்நாட்டில் தாக்கலாகவுள்ள பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சூழலியல் அம்சங்கள் குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் கோரிக்கைகள் நிரம்பிய பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

8. நக்சல் சண்டையில் வீரமரணம்- தஞ்சை கணேசனுக்கு சௌரிய சக்ரா விருது!

நக்சல் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் தஞ்சாவூர் கணேசனுக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இதனை அவரது மனைவி பெற்றுகொண்டார்.

9. சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைதூரப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

10. ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்துக - மூட்டா சங்கம்

அனைத்து கலைக் கல்லூரிகளிலும் ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்த, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என மூட்டா சங்கம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.