1. Exclusive Interview: சார்பட்டா கதை கேட்டதுமே ஷூட்டிங் போக துடிச்சேன் - நடிகர் ஆர்யா
பழைய மெட்ராஸை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் 'சார்பட்டா' படம் வரும் 22ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. கோலிவுட்டை கலக்கவிருக்கும் இப்படம் குறித்து, படத்தின் கதாநாயகன் ஆர்யா பல சுவாரஸ்யத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
2. 'என் புகைப்படங்கள் எளியோருக்கானது': இது டேனிஷ் சித்திக்குக்கான அஞ்சலி
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ஒளிப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். பெரும்பாலும் மக்களின் பிரச்னைகள் சார்ந்தே இவரது ஒளிப்படங்கள் அமைந்திருக்கும். டெல்லியில் கொத்துக் கொத்தாக கரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் எரியூட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் வரை இவரது புகைப்படங்கள் பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளன. ஓர் எளியோருக்கான கலைஞன் கொல்லப்பட்ட நிகழ்வு வரலாற்றின் தவிர்க்கமுடியாத துன்பியல் நிகழ்வு.
3. பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி
பேனர் வைக்கும் கலாசாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கட்சியினர் மீது திமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
4. மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
5. இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ’ராஜேஷ் கண்ணா’ நினைவு நாள்!
இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும், முதல் ட்ரீம் பாய் என்றும் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மகள் ட்விங்கிள் கண்ணா அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
6. பருத்தியைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுங்க - நன்னிலம் விவசாயிகள்
நன்னிலம் அருகே கனமழையால் சேதமடைந்த பருத்திகளை ஈரப்பதம், நிறம் மாறுதலை பொருட்படுத்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
7. வெற்றி வாகை சூடிய 'வேலையில்லா பட்டதாரி'யின் 7ஆம் ஆண்டு கொண்டாட்டம்
படிப்புக்கேற்ற வேலையை பிடித்தவாறு செய்ய வேண்டும் என உரக்கக் கூறி மிகப்பெரும் வெற்றி பெற்ற, தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் வெளியாகி, இன்றோடு 7 ஆண்டுகள் ஆவதையொட்டி, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
8. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம்?
தனியார் பள்ளிகள் முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
9. சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: அதன் பின்னணி என்ன?
இரு சாதியினர் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி, வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.
10.டோக்கியோ ஒலிம்பிக்: தென் கொரிய சாம்பியனுக்கு கரோனா
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், தென் கொரியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவருமான ரியூ சியூங்-மின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.