ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9PM
9PM
author img

By

Published : Nov 12, 2020, 8:44 PM IST

Updated : Nov 12, 2020, 8:55 PM IST

1.தமிழ்நாட்டில் மேலும் 2,112 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 12) மேலும் 2,112 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

2. இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் இடம் பிடிப்பாரா நிதிஷ்குமார் !

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையை உறுதிசெய்துள்ள என்.டி.ஏ கூட்டணி ஜே.என்.யூ தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சியமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

3. 'ஆசியான் நாடுகளுக்கு தான் முதல் முக்கியத்துவம் ' - பிரதமர் மோடி

ஆசியான் நாடுகளுக்கே இந்தியா முதலாவதாக முக்கியத்துவம் கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4. கேரளாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

5. தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் : ஜிப்மருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு, மாநில சுகாதாரத்துறை பட்டியலில் இருக்கும் தகுதி வாய்ந்த மாணவர்களை அழைக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு குழுவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. குடிநீர் பாதுகாப்புக்கு நிலத்தடி நீர் சேகரிப்பு முக்கியம் - மத்திய அமைச்சர்

டெல்லி: நிலத்தடி நீரை சேகரிப்பதன் மூலமாகவே குடிநீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

7. மும்பை விமான நிலையத்தில் குருணால் பாண்டியா கைது!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

8. விசாரணைக்கு ஆஜராக அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன்

மும்பை: விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

9. களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு 'பீஸ்ட்'

துபாய்: கிரிக்கெட் களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு பீஸ்ட் என ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.

10.கரோனா தடுப்புமருந்து குறித்த நல்ல செய்தி வந்தும் சரியும் ஆசிய பங்குச்சந்தை: காரணம் என்ன?

டெல்லி: ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான தகவல் வெளியான பின்னரும் இந்திய ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

Last Updated : Nov 12, 2020, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.