ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 9AM - 9am news tamil

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்..

காலை 9 மணி செய்தி
காலை 9 மணி செய்தி
author img

By

Published : Aug 16, 2021, 9:08 AM IST

1. 'அதிமுகவின் 3ஆவது தலைமுறையே' - சசிகலா ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு

ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2. தூத்துக்குடி துறைமுக ஏற்றுமதி-இறக்குமதியில் வளர்ச்சி: துறைமுக தலைவர்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் கடந்த ஆண்டை விட சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறினார்.

3.'பவானிசாகரில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவு'

பவானிசாகர் பகுதியில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

4.தமிழ்நாட்டின் கடன் ரூ. 9 லட்சம் கோடி - ஹெச். ராஜா

தமிழ்நாட்டின் கடனாக ரூ. 9 லட்சம் கோடி உள்ளது என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

5.மாநில தென்னை நாற்று பண்ணையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரத்திலுள்ள தேவிப்பட்டினம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையிலுள்ள தென்னங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஜசந்திரகலா பார்வையிட்டார்.

6. 19 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலை வேங்கை குதிராம் போஸ்

தனது 19ஆம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸின் தியாக வரலாறு குறித்த செய்தித் தொகுப்பு.

7. கொல்கத்தா: ரூ. 55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கொல்கத்தாவில் ரூ. 55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8.ஆன்லைனில் மூதாட்டியிடம் ரூ. 2 கோடி ஏமாற்றிய வழக்கில் மூவர் கைது

இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவதாக கூறி ஆன்லைனில் மூதாட்டியிடம் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் பெண் உள்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

9.மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த நண்பர் கைது

நடிகை மீரா மிதுனுக்கு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஷாம் அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

10. TNPL 2021: சென்னை அணி சாம்பியன்

டிஎன்பிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.