ETV Bharat / state

காலை 9 மணிச் செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - காலை 9 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணிச் செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணிச் செய்தி சுருக்கம்
காலை 9 மணிச் செய்தி சுருக்கம்
author img

By

Published : Oct 19, 2021, 9:15 AM IST

1. இந்தி படிக்க கட்டாயப்படுத்திய சொமெட்டோ: மாறாத மொழி ஆதிக்க மனநிலை!

உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கோரிய வாடிக்கையாளரிடம், மொழி தெரியாததால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் பதிலளித்துள்ளது. இதன் உரையாடல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், சொமெட்டோ நிறுவனத்திற்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

2. தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை - சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்

சிஎஸ்கே இல்லாமல் எம்.எஸ். தோனி இல்லை; எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை எனச் சென்னை அணியின் உரிமையாளரும் ஐசிசி முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

3. 'மழலையர் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை'

கரோனா காலகட்டம் என்பதால் குழந்தைகளின் உடல்நலனை மனத்தில் கொண்டு மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

4. இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து

நபிகள் நாயகம் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியர்களுக்குத் தனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துக்கொண்டார்.

5. 'மீலாதுன் நபி நாளை சகோதரத்துவ நாளாகக் கடைப்பிடிப்போம்'

மீலாதுன் நபி நாளான இன்று உலக சகோதரத்துவ நாளாகக் கடைப்பிடிப்போம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

6. 'நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆணவப் படுகொலை... தடுக்கத் தேவை தனிச்சட்டம்!'

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் மிகக் கொடூரமான முறையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்த நிறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டார்.

7. தனியார் பள்ளிகளுக்கு ரூ.419 கோடி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்கு 419 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

8. விமானம் மூலம் ரூ.1.40 மதிப்பிலான தங்கத்தைக் கடத்திவந்தவர் கைது

சென்னை விமான நிலையத்தில் 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான 2.67 கிலோ கிராம் தங்கம், மின்னணுப் பொருள்களைக் கடத்திவந்தவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

9. குழந்தையுடன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை அனுஷ்கா சர்மா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10. 'மல்லு மல்கோவா' மாளவிகா மோகனன் புகைப்படத் தொகுப்பு!

நடிகை மாளவிகா மோகனனின் அசரவைக்கும் புகைப்படத் தொகுப்பு, இதோ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.