ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7PM
7PM
author img

By

Published : Nov 24, 2020, 6:50 PM IST

1. 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு 43 மொபைல் செயலிகளை தடை செய்வதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன.

2. மாமல்லபுரத்தில் சூறைக்காற்றுடன் கொட்டும் கனமழை!

சென்னை: காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், அங்கு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

3. நிவர் புயல் மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிப்பு!

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்வதற்காக மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4.'நிவர்' புயல்: கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!

கடலூர் மாவட்டத்தில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

5. கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

டெல்லி: கரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் இறப்பு விகதமும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உள்ளது என்றும் இருப்பினும், பெருந்தொற்று பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

6. உலகின் ஆடம்பரமான குடியிருப்பு நகரம் எது எனத் தெரியுமா?

டெல்லி : உலகின் ஆடம்பரமான குடியிருப்பு தரவரிசைப் பட்டியலில் ஆக்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், டெல்லி 27ஆவது இடத்தையும் மும்பை 33ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

7. போலி டி.ஆர்.பி. மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த மும்பை காவல்துறை!

மும்பை : தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் (டி.ஆர்.பி.) மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையை மும்பை காவல்துறையினர் இன்று (நவ.24) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

8.“ஸ்மித்தை வீழ்த்த புது யுக்தியைக் கையாள வேண்டும்” - சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்துவதற்கு பந்துவீச்சாளர்கள் புதுமையான யுக்திகளைக் கையாள வேண்டுமென கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

9. ”ரோஹித், கோலி இல்லாதது அணியில் வெற்றிடத்தை உருவாக்கும்” - ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின்போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியும் இல்லாதது அணியில் மிகப்பெரும் வெற்றிடத்தை உருவாக்கும் என ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

10. A Suitable Boy: நெட்பிளிக்ஸ் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு

இந்த படத்தில் கோயிலுக்குள் முத்தக் காட்சி வைத்திருப்பது, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என பாஜக இளைஞரணியின் தேசிய செயலாளர் கவுரவ் திவாரி புகாரளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.