ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7am
7am
author img

By

Published : Dec 7, 2020, 7:01 AM IST

1.விவசாயிகளுக்கு ஆதரவு; நாடு தழுவிய முழு அடைப்புக்கு திராவிடர் கழகம் ஆதரவு!

விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) திராவிடர் கழகம் ஆதரவு அளித்துள்ளது.

2.அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பெங்களூரு வந்தடைந்தார் ரஜினிகாந்த்!

டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றார்.

3.'பேச்சுவார்த்தை என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்காக மத்திய அரசு நாடகம்'- பெ.சண்முகம்!

பேச்சுவார்த்தை என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது என அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4.தூத்துக்குடியில் கனமழை: மாநகரின் முக்கியச் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இடைவிடாது பெய்த கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

5.நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் - நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்!

நாகை: கனமழை காரணமாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் உள்வாங்கியதால் அச்சத்தில் சாலையையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள் வெளியேறினர்.

6.நிவர் புயல் நிவாரணமாக 3,700 கோடி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாட்டில் நிவர் புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ. 3,700 கோடி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

7.விவாதத்துக்கு நான் தயார், ஆ. ராசா தயாரா? ராஜேந்திர பாலாஜி

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது, அதனால் கட்சி ஆரம்பித்துள்ளார். மொத்தத்தில் அனைவரும் சேர்ந்து திமுக -வை கும்மியடிக்க போகிறோம் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

8.கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் எலிசபெத் ராணி - காரணம் என்ன தெரியுமா?

லண்டன்: பிரிட்டனில் முதியோர் காப்பகத்தில் வசிப்பவர்கள் , 80 வயதை தாண்டியவர்கள் ஆகியோருக்கு மட்டுமே முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தற்போதைக்கு தடுப்பூசி வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

9.குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் லுக் - டீசர் தேதி அறிவிப்பு!

சென்னை: எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் ஶ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

10.ஐஎஸ்எல்: கேரளாவை பந்தாடியது கோவா!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.