ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @7pm

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM
author img

By

Published : Sep 15, 2021, 7:08 PM IST

1. ’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவச் செல்வங்களே, மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், #நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

2. ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3. சிபிஎல்லில் காயம்: சிஎஸ்கேவில் ஆடுவாரா டூ ப்ளசிஸ்?

சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூ ப்ளசிஸுக்கு காயம் காரணமாக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

4. நகைக்கடன் தள்ளுபடி: திருத்தப்பட்ட விவரங்களை கோரிய கூட்டுறவுத் துறை

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பயனாளர்களின் திருத்தப்பட்ட விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது.

5. சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

6. நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

நீட் தேர்வு அச்சத்தால் நிகழும் மாணவர்கள் மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

7. இந்தாண்டும் டெல்லியில் பட்டாசுக்கு தடை - கெஜ்ரிவால் கெடுபிடி

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், அதை வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

8. அரசு மருத்துவமனை வளாகத்தில் குட்கா மென்று துப்பிய நபர்: சுத்தம் செய்யவைத்த ஆட்சியர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் குட்காவை மென்று துப்பிய நபரை, அவரது கைகளாலேயே சுத்தம் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

9. நேரடி வகுப்புக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல தடை கோரப்பட்ட வழக்கில், மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களைத் தெரிவித்தால், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி, சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.