ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Nov 8, 2020, 7:01 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்தி
7 மணி செய்தி

1. தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு மேலும் 2,334 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 2,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரை: பாஜக தலைவர் எல். முருகன் கைது

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2. கோவி ஷீல்ட் தடுப்பூசி: 75 தன்னார்வலர்களுடன் முதல்கட்ட சோதனை நிறைவு!

சென்னை: தமிழ்நாட்டில் கோவி ஷீல்ட் தடுப்பூசி சோதனை 75 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக நிறைவு பெற்றது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

3. கேங்மேன் பணிக்கு தகுதிபெற்றும் காத்திருக்கும் அவலநிலை - தற்காலிக பணியாளர்கள் வேதனை!

சென்னை: மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு என அனைத்திலும் தகுதி பெற்றும் பணி ஆணைக்காக பல மாதங்களாக காத்திருக்க வேண்டி உள்ளதாக தற்காலிகமாக பணியாற்றிவரும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

4. 'நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம்; ஆனால்...' - கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம், ஆனால் நிச்சயம் கடைசிப் பெண் அதிபராக இருக்க மாட்டேன் என்று துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

5. எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி - லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய பணம்

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட்ட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்டண தொகை விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், கணக்கில் வராத 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

6. கணவர் மரணம்: 3 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ஈரோடு: கிருஷ்ணம்பாளையத்தில் கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த மனைவி, தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7. ஈரோட்டில் டாடா சுமோ கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

ஈரோடு: மணியாட்சி பள்ளம் பகுதியில் டாடா சுமோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8. ஊரடங்கின்போது எனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொண்டேன்: தீப்தி ஷர்மா

ஊரடங்கின்போது எனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொண்டேன் என ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியின் வீராங்கனை தீப்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.

9. எங்களால் நிச்சயம் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும்: ஸ்டோய்னிஸ்

துபாய்: ஹைதராபாத் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், நிச்சயம் எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என டெல்லி அணி ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

10. பார்முலா ஒன் கார் பந்தயம்: ரசிகர்கள் வெளியே, சுகாதார ஊழியர்கள் உள்ளே!

மனமா(பஹ்ரைன்): இம்மாத இறுதியில் பஹ்ரைனில் நடைபெறவுள்ள பார்முலா ஒன் கார் பந்தயத்தை நேரில் காண சுகாதார ஊழியர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.