ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத் தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்... இதோ...

Top 10 news, 5 மணி செய்திச் சுருக்கம்
ETV BHARAT TOP 10 NEWS AT 5PM ON MAY 18
author img

By

Published : May 18, 2021, 5:23 PM IST

1. மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு சிலை அமைக்கப்படும் - மு.க. ஸ்டாலின்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு!

கரோனா தடுப்பு நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.50 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. கரோனா நிவாரண நிதி அளித்த அன்புமணி: எவ்வளவு தெரியுமா?

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் தமது ஒரு மாத ஊதியமான ரூ.1,89,000-த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

4. வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம்: அமைச்சர் சக்கரபாணி உத்தரவு

கரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு செய்த வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

5. கரோனா நிவாரண நிதி வழங்கிய நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, கரோனா நிவாரண நிதியாக தனது சிறை வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5000 சிறைக் கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

6. புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

7. மறைந்த நீதிபதி நீஷ் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்

கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிபதி நீஷ் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

8. ட்வீட் செய்து வேகமாக டெலிட் செய்த அஸ்வின்: ஏன் தெரியுமா?

சென்னைக்குள் பயணிப்பதற்கு எங்கு இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று நக்கலாக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், பின் அந்தப் பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

9. 17ஆம் நூற்றாண்டு வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

ஆமத்தூர் அருகே தவசிலிங்கபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10. கரோனா வார்டாக மாறிய தனியார் பள்ளி பேருந்து!

சிவகாசியில் பள்ளிப் பேருந்தில் ஐந்து ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகளை அமைத்து அரசு மருத்துவமனைக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.