ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

etv bharat
etv bharat
author img

By

Published : Apr 21, 2021, 5:48 PM IST

1.நாசிக் மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் குறைபாட்டால் 22 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநில நாசிக் மருத்துமனையில், பிராண வாயு சேமிக்கும் டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழப்பு.

2.முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு: ஹர்ஷ் வர்த்தனுக்கு நன்றி!

கரோனா முன்களப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக அறிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

3.குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் - கண்பார்வை இல்லாத தாய் பரிதவிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை வாங்கனி ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

4.விரைவில் சில்லறை வர்த்தகத்தில் கோவிஷீல்டு

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்து நான்கு முதல் ஐந்து மாத கால இடைவெளியில் சில்லறை வர்த்தகத்தில் கிடைக்கும் என எஸ்ஐஐ தலைமை நிர்வாக அலுவலர் ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

5.மே 2ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்:சத்யபிரதா சாகு தகவல்!

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

6.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி - யோகி ஆதித்யநாத்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

7.சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!

சென்னை : சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

8.எந்த ரக கரோனாவையும் எதிர்த்து நிற்கும் கோவாக்சின் - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கரோனா தடுப்பூசி, எந்தவித உருமாறிய கரோனாவையும் எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

9.கரோனா கட்டுப்பாடுகளுடன் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு நடத்தவேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

கரோனா கட்டுப்பாடுகளுடன் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.சல்மான்கானின் 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' ட்ரெய்லர் நாளை வெளியீடு

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 22) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.