ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4 pm - டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : May 15, 2020, 4:00 PM IST

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி

டெல்லி: கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்னபற்றவில்லை என தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

மக்கள் நலனில் இல்லாத உத்வேகம் மதுக்கடைத் திறப்பில் - அரசை சாடிய கமல்

சென்னை: மக்கள் நலனில் இல்லாத உத்வேகம் மதுக்கடைத் திறப்பதில் உள்ளதென தமிழ்நாடு அரசினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சாடியுள்ளார்.

கரோனா: இந்தியாவுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கும் உலக வங்கி

டெல்லி: கோவிட்-19 தொற்று பாதிப்புகளிலிருந்து மீளும் நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவும் வகையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை உலக வங்கி வழங்க உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமரை விமர்சித்த திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம்: இளைஞர் தற்கொலை!!

மத்தியப் பிரதேசம்: முன்விரோதம் காரணமாக சிறுநீர் குடிக்க வைத்தால் அவமானம் தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை தேவை' - வைகோ

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கரோனா காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது - துறைமுகத் தலைவர் டி.கே.ராமசந்திரன் பிரத்யேக பேட்டி

தூத்துக்குடி: கரோனா சூழலில் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது என துறைமுக தலைவர் டி.கே.ராமசந்திரன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி.

கரோனா: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பரிசோதனை திட்டம் தயார்

டெல்லி: மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கான செயல் திட்டத்தை ஐ.சி.எம்.ஆர் வரையறை செய்துள்ளது.

காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த மேரி கோம்!

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், தனது இளைய மகனின் பிறந்த நாளை சிறப்பானதாக மாற்றிய டெல்லி காவல் துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது இயற்கை....

அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்று பலர் கூறுவதுண்டு. அந்தத் திமிருக்கு ஞான செருக்கு, படைப்பாளிக்கான கர்வம் என்று மற்ற பெயர்களும் உண்டு. ஆனால், இந்த வார்த்தைகளை கவனமாக தவிர்த்துவிட்டு, ராஜா திமிராக இருக்கிறார் என்று இன்றும் சொல்பவர்களின் ஆழ் மனதுக்குள் இளையராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணம் இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.