- அரபு நாடுகளுக்குச் செல்ல இருக்கும் ராணுவத் தளபதி முகுந்த் நரவணே!
டெல்லி: ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ளார்.
2. புரெவி புயல்: சென்னை விமான நிலையத்தில் 3ஆவது நாளாக 12 விமானங்கள் ரத்து!
சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக 12 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச்சென்றன.
3. கடற்படை வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து
கடற்படை நாளை முன்னிட்டு கடற்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
4.புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!
சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
5.மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்த முதலமைச்சர்!
புதுச்சேரி: புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால், மழைநீர் சூழ்ந்த ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வுசெய்து, மழைநீரை விரைந்து வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
6.'ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை' - ரிசர்வ் வங்கி
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இன்றி நான்கு விழுக்காட்டிலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
7.'ஜனநாயகத்திற்குப் பேராபத்து சீனா' - எச்சரிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: இரண்டாம் உலகப்போரின் முடிவில் இருந்தே ஜனநாயகத்திற்குப் பேராபத்தாக சீனா திகழ்வதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் கூறியுள்ளார்.
8. ‘அரியர் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணை இன்று வெளியீடு’
சென்னை: சட்டப்படிப்புக்கான அரியர் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் இன்று (டிச. 04) முடிவுசெய்யப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.டெல்டா, வட மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் நிலைகொண்டுள்ளதால் வட, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவிற்குப் பதிலடி தருமா இந்தியா? - டி-20 போட்டி இன்று தொடக்கம்
கான்பெரா: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நடைபெறுகிறது.