ETV Bharat / state

பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

ஈடிவி பாரத்தின் பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Sep 15, 2021, 11:36 AM IST

பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
பகல் 11 மணி செய்திச் சுருக்கம்

1. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளான இன்று(செப் 15) அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

2. ”முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு விலக்கு வேண்டும்”

முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் , உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

3. வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்!

உலக பிரசித்தி பெற்றகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

4.காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர்வரையில் 100 பேருக்கு அண்ணா பதக்கம்

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

5. ஸ்டாலின் ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படுமா?

பத்து வருடங்களுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

6. ரிதம் - தமிழின் ஃபீல் குட் கவிதை

25 நொடிகள் மௌனத்தை வைப்பதற்கு தனது திரைமொழி மீது அபார நம்பிக்கை இருந்தால் மட்டுமே முடியும். அதேபோல் சித்ரா தனது திருமண வாழ்வு குறித்தும், கணவரின் இறப்பு குறித்தும் கூறி முடித்ததும் நிகழும் ஒருவித அமைதி என நிச்சயம் தமிழ் சினிமாவில் ரிதம் புதுக்கவிதை.

7. சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கர்ணன்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் ஜெர்மனி திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

8. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கசடதபற பட இயக்குநர்

'கசடதபற' படத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இயக்குநர் சிம்பு தேவன் நன்றி தெரிவித்துள்ளார்.

9. HBD ரம்யா கிருஷ்ணன்... தன்னை தானே செதுக்கிய ராஜமாதா

நடிகை ரம்யா கிருஷ்ணனின் 51ஆவது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன.

10. டிக்கிலோனா சக்ஸஸ் மீட்- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

டிக்கிலோனா வெற்றி விழாவில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.