ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 17, 2021, 9:14 AM IST

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
  1. சர்வதேச நீதி தினம்- குற்றவியல் நீதிமன்றம் வரலாறு!

இன்று (ஜூலை 17) சர்வதேச நீதி தினம் கொண்டாடப்படும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

2. தடுப்பூசி செலுத்த கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை - சென்னை மாநகராட்சி

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், காசநோய் பாதித்தவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி மையங்களில், முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

3. தன்னம்பிக்கை தளராத திருநங்கையின் செம்ம டேஸ்ட் தேநீர் கடை!

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த திருநங்கை கரோனா பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து நிலையில், தன்னம்பிக்கையை தளரவிடாமல் புதிய பாதையில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார்.

4. சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதம் - சாதனை படைத்த இளைஞர்

கர்நாடகா: பாசகுலியில் உள்ள கெருசோப்பா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மஞ்சுநாத் நாயக், 17 சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதத்தை செதுக்கி இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளார்.

5. மூதாட்டியின் பணத்தை பறித்து காட்டில் விட்ட டிப்டாப் ஆசாமிகள்!

உளுந்தூர்பேட்டையில் மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி நகை மற்றும் ரொக்கப் பணத்தை பறித்து காட்டில் விட்டு சென்ற டிப்டாப் ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

6. எச்சில் தொட்டு பயண சீட்டை வழங்கிய நடத்துநருக்கு கரோனா பரிசோதனை

பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயண சீட்டை வழங்கிய அரசு பேருந்து நடத்துனருக்கு திருப்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைத்தே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

7. குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்பு

குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரம் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான ராணுவ வீரரை வலை வீசி தேடி வருகின்றனர்.

8. தீப்பெட்டி கழிவுகளை காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம்

தீப்பெட்டி தொழிற்சாலையில் வீணாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

9. தமிழ் சினிமாவின் ராட்சசனுக்கு பிறந்த நாள்!

கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டு பின்னாள்களில் சினிமா கதநாயகன் ஆனவர்தான் விஷ்ணு விஷால். இவர் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தமிழ்நாட்டின் வேலூரில் 1984ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.

10. மீண்டும் தொடங்கியது ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.