ETV Bharat / state

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - Top 10 news

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்...

7 மணிச் செய்திச் சுருக்கம்
7 மணிச் செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 28, 2021, 7:19 PM IST

1. 'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!

கரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாய் ஏற்கனவே கொடுத்துள்ளதால், தனக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்?

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3. டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை: முடிவுக்கு வந்த பிரவின் ஜாதவ் பயணம்!

வில்வித்தையில் அமெரிக்க வீரர் எலிசனிடம் 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய வீரர் பிரவின் ஜாதவ் வெளியேறினார்.

4. சுத்தி அடித்த தீபிகா குமாரி: கால் இறுதியின் முந்தைய சுற்றுக்குத் தகுதி!

வில்வித்தை ரவுண்ட் ஆஃப் 16இல் அமெரிக்க வீராங்கனையை 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் தீபிகா குமாரி கால் இறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

5. 'பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்' - ஓ.பி.ரவிந்திரநாத்

தமிழ்நாடு மக்களின் பிரச்சனைகளுக்காக பிரதமரை சந்திப்பதாகவும், தாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

6. கருணாநிதி பல்லூடக ஆராய்ச்சி மையம் அமைக்க கருத்து கேட்பு - துணைவேந்தர் தகவல்!

சென்னை பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பல்லூடக ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு அரசிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

7. ’சங்கரய்யாவிற்கு கொடுத்த விருதை எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்’ - கமல்ஹாசன்

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா தொடர்பான தனது கருத்துகளை கேட்க அழைத்த ஒன்றிய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக, நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

8. திருந்தி நல்ல முறையில் வாழ விரும்புகிறேன் - ரவுடி கல்வெட்டு ரவி!

திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புவதாக, வடசென்னை பிரபல ரவுடி கல்வெட்டு ரவி தெரிவித்துள்ளார்.

9. 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்: வெளியான தகவல்!

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

10. தன் வாழ்க்கையை சீர்குலைத்த தாய்மாமனை கொலை செய்த நபர் கைது!

சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்து, பலமுறை சிறை செல்லக் காரணமாக இருந்த தனது தாய் மாமனைக் கொலை செய்த நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.