- தமிழ்நாடு நாள்
1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்ட தினத்தை நினைவுகூறும் விதமாக இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணாதுரையால் 1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. தற்போது நவம்பர் 1 ஆம் தேதியை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.
- அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்றால் நேற்று(அக்.31)இரவு காலமானார்.
- புதுச்சேரி விடுதலை நாள்
பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியிலிருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி விடுதலைப்பெற்றது. அதன்படி, ஆண்டுதோறும் புதுச்சேரியில் நவம்பர் 1ஆம் தேதி அம்மாநில விடுதலை நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.
- பீகார் தேர்தல்
பீகாஎ மாநில தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இரண்டாம் கட்ட பரப்புரையை மேற்கொண்டுவருகிறார்.
- ஐபிஎல் இன்றைய போட்டி
ஐபிஎல் 2020 லீக்கின் 53ஆவது ஆட்டத்தில் மாலை 3.30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 54ஆவது ஆட்டத்தில் இரவு 7.30 மணியளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.