ETV Bharat / state

New Year 2023 horoscope.. புத்தாண்டு ராசிபலன்கள்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.? - ராசிபலன் ரிஷபம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான 2023ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்களை காண்போம்.

புத்தாண்டு ராசிபலன்கள்
புத்தாண்டு ராசிபலன்கள்
author img

By

Published : Dec 31, 2022, 7:08 AM IST

மேஷம்: 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மேஷ ராசிக்காரர்கள் உறுதியாகவும் வலிமையாகவும் இருப்பார்கள். சிலரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். இல்லையெனில் மனக்கசப்பு ஏற்படலாம். இதன் காரணமாக, சில நல்ல வாய்ப்புகள் உங்கள் கையை விட்டு நழுவ வாய்ப்புள்ளது. முழு அதிகாரமும் தன்னிடம் தான் உள்ளது என்ற மமதையை மாற்றிக் கொண்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அப்போது தான் முன்னேறிச் செல்வதற்கான பலன் கிடைக்கும். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொள்வீர்கள். மத விஷயங்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக கலந்துகொள்வீர்கள். நீங்கள் கோயிலுக்கு நன்கொடை அளிக்கலாம் அல்லது ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சமூக சேவை செய்யலாம். ஆண்டின் தொடக்கத்தில், சூரியனும் புதனும் உங்கள் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால், உங்கள் தந்தையுடனான அன்பு அதிகரிக்கும். அதனால் அவரிடமிருந்து சில பெரிய நன்மைகளைப் பெறலாம். மார்ச் முதல் மே வரை நேரம் நன்றாக இருக்கும். சில நேரத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் வாங்குவது தொடர்பான விஷயத்தில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில் இருப்பதால், நீங்கள் சட்ட விஷயங்களில் முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளின் முடிவும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் எதிரிகளை அழிக்கலாம். வேலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் நவம்பர் முதல் டிசம்பர் வரை சற்று கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு விருதைப் பெறவும் வாய்ப்புள்ளது. ஆண்டின் ஆரம்பப்பகுதி பயணங்கள் மேற்கொள்ள ஏற்றதாக இருக்கும்.

ரிஷபம்: 2023ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும் ஆண்டாக அமைகிறது. உங்கள் ராசியில் செவ்வாயின் செல்வாக்கு காரணமாக உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். இதன் காரணமாக நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் இந்த ஆண்டு ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கலாம். நிதி ரீதியாக மிகப்பெரிய முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சில நேரத்தில் அதிகமாகவே செலவு செய்வீர்கள். நவம்பர் டிசம்பர் மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் நீங்கள் வலிமையடைவீர்கள். இந்த ஆண்டில் உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த ஆண்டு நீங்கள் நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். நீங்கள் நீண்ட காலம் தங்கக்கூடிய வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதிக தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த ஆண்டு நீங்கள் நிறைய பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் ஏற்கனவே கடினமாக உழைப்பவராக இருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் இருங்கள். அதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் நீங்கள் மனதில் கொண்டால், இந்த ஆண்டு உங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை காரணமாக, நீங்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் குறைவாகவே நேரத்தைச் செலவிடுவீர்கள்.

மிதுனம்: 2023ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு நிறைய புதிய விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்தே, அதிர்ஷ்டம் எப்போது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்களின் தடைப்பட்ட வேலைகள் யாவும் முடிவடையும், நீங்கள் பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவீர்கள். இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் சற்று அதிகரிக்கும். எனவே நிரந்தர வருமானம் தேட முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் உங்கள் மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அடிக்கடி பயணம் செய்வீர்கள். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் நிறைய பயணம் செய்வீர்கள். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதன் முடிவு இந்த ஆண்டு வரலாம். இந்த நேரத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால், ஜனவரி மாதத்தில் கொஞ்சம் அமைதி காத்து இருங்கள். உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், நீங்கள் ஏதேனும் வியாபாரம் செய்வதாக இருந்தால், அவர்களின் உதவி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபரத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கடினமான சவாலைகளையும் நீங்கள் எளிதில் கடந்து செல்வீர்கள்.

கடகம்: 2023ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான ஆண்டாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும். இதன் காரணமாக உங்களுடைய பல பணிகள் முடிவடையும். உங்களின் தடைப்பட்ட வேலைகளும் முடியும். உங்கள் நீண்ட நாள் ஆசைகளும் இந்த ஆண்டு நிறைவேறும். இந்த ஆண்டு நீங்கள் நிறைய பயணம் செய்வீர்கள். குறிப்பாக புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மன அமைதியைத் தேடிக்கொள்வீர்கள். மதம் சார்ந்த விஷயங்களில் உங்கள் நம்பிக்கையும் தெய்வ பக்தியும் அதிகரிக்கும். சமுதாயத்தில் நல்ல பணி செய்யும் எந்த நிறுவனத்திலும் நீங்கள் சேர வாய்ப்புள்ளது. புதிய வேலை சேர்வதற்கான வாய்ப்புள்ளது. சமூக அந்தஸ்து உயரும். இந்த ஆண்டு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், விரைவில் அதைச் செய்து வெற்றி பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிப்பதால், நம்பிக்கை வலுவாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் சில புதிய வேலைகளில் ஈடுவடுவதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கலாம், நீங்கள் அதை யோசித்து தனிமையாக இருப்பீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை குறைவாகவே செலவிடுவீர்கள். உங்களின் இந்த நடத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு மனவேதனையைத் தரலாம். மேலும் அவர்கள் அதை உங்களிடம் சொல்லி வருத்தப்படலாம். அரசாங்கத் துறையினரிடம் இருந்து நல்ல செய்திகள் வரலாம். உங்கள் வேலையில் முன்னேற சில நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப விஷயங்களில் கூட அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய புதிய விஷயங்கள் நிறைந்தாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உங்களின் நம்பிக்கை மேலோங்கி இருக்கும். கடவுள் மீதான உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். மத வழிபாட்டில் பங்கேற்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். பல முக்கிய நபர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையான நபர்களுடனும் தொடர்புகள் ஏற்படக்கூடும், இதன் காரணமாக நீங்கள் வரும் காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த ஆண்டு முதலீடு செய்வதற்கு மிகவும் நன்றாக இருக்கும், அதனால் நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறலாம். நீண்ட கால முதலீடு மிகவும் வெற்றிகரமாக இருக்கும். எனவே உங்கள் கவனத்தை இதுபோன்ற விஷயங்களில் மட்டும் செலுத்துங்கள். ஆண்டின் தொடக்கத்தில், நீங்கள் ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் அருகில் உள்ளவர்களுடன் பழகுவீர்கள். இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடும். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் மறந்துவிட்டு உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். இந்த ஆண்டு நிறைய பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதில் சிலர் வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறிய பிரச்சினைகளாக இருந்தாலும் கூட உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை அழகுபடுத்துதலில் கவனம் செலுத்துங்கள், உங்களுக்கு தேவையானதை நீங்களே ஷாப்பிங் செய்யுங்கள். குறிப்பாக ஆண்டின் நடுப்பகுதியில், நீங்கள் நிறைய ஷாப்பிங் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில விலையுயர்ந்த பொருட்களை நீங்கள் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த ஆண்டு, உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப்போகிறது. இதன் காரணமாக உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

கன்னி: 2023ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு கலவையான பலன்களை தரும் ஆண்டாக அமைகிறது. இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தின் மீது அதிகம் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் நடத்தை அடுத்தவரின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள், என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். உங்கள் வார்த்தைக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கலாம். நீங்கள் பேசும் கடுமையான வார்த்தைகாளால் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி வெறுவீர்கள். இந்த ஆண்டு சொத்து வாங்குவதில் வெற்றி கிடைக்கும். ஆண்டின் நடுப்பகுதியில், வாழ்க்கைத் துணையின் உதவியுடன் பெரிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதம் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் பிறகு அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களிலும் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களின் போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கத்திடமிருந்து சில நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் தந்தையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். புதிய யோசனைகள் மனதில் தோன்றும், இதன் காரணமாக வியாபரத்தை நீங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அதனால் வெற்றியும் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் இப்போது வேறு ஒரு வேலைக்கு மாற முயற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் இப்போதைக்கு அதே வேலையைத் தொடருவதுதான் நல்லது.

துலாம்: 2023ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் இந்த ஆண்டு ஒரு புதிய தொழிலைத் தொடங்க முடிவு செய்யலாம். நீங்கள் முன்னேறுவதற்கான முழு வாய்ப்பையும் பெறுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் பிஸியாக இருந்தாலும், உங்கள் குடும்பத்தினரிடமும் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிளும் அவர்களுடன் துணையாக நிற்பீர்கள். இது உங்கள் குடும்ப பந்தத்தை பலப்படுத்தும். குடும்பத்தில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த ஆண்டு நீங்கள் நீண்டதூரப் பயணம் செய்யலாம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பீடுங்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சட்டத்துறையில் ஒரு வல்லுநராக இருந்தால், இந்த ஆண்டு உங்கள் வெற்றியை உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள். உங்களுக்கு நண்பர்களின் முழு ஆதரவும் இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் உங்களுடன் நிற்பதைக் காணலாம். நீங்கள் ஒரு புதிய துறையில் சாதிக்க முயற்சி செய்ய விரும்பலாம். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் மனதில் நிறைய உணர்ச்சிகளை உள்ளடக்கி, வாழ்க்கையின் சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சில நேரத்தில் நீங்களே யோசிக்காமல் தவறு செய்யலாம், எனவே கவனமாக இருங்கள். இந்த வருடம் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஆண்டு சொத்து வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: 2023ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த ஆண்டு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் ஏற்படும். இந்த ஆண்டு நீங்கள் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முதலாவதாக, எதற்கெடுத்தாலும் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வேலைக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இரண்டாவதாக, எந்த விஷயத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு எதிரிகளின் தொந்தரவு ஓரளவிற்கு இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்களுக்கு எதிராக எந்த வேலையும் செய்ய முடியாமல் போகாது. இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்றம் சென்ற வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளால் உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படலாம். குடும்பப் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன், தடைப்பட்ட உங்களின் வேலைகள் யாவும் முடிவடையும். இதன் மூலம் உங்களுக்கு பொருளாதார நன்மைகள் மற்றும் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். நீங்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்கள். அந்த பயணம் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ஆண்டு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் தேடிவரும். வீட்டில் விஷேசங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக ஒன்றைக் கற்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் ஏற்படும். நீங்கள் சில நபர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள், மேலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

தனுசு: 2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளில் நீங்கள் வெற்றி பெறலாம், இதன் காரணமாக உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். இந்த ஆண்டு உங்கள் வேலையைச் சிறப்பாக செய்வீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்த ஆண்டு மற்ற துறைகளிலும் பெயரையும் புகழையும் சம்பாதிக்கலாம். சில காரணங்களால் நீங்கள் வெகுமதியையும் பெறலாம். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொண்டு செய்வதன் மூலம் மக்களுக்கு உதவுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது உங்களின் தன்னலமற்ற சேவையின் உணர்வை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த ஆண்டு அதிகமாக பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அதனால் செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. ஆண்டு இறுதிக்குள் வங்கியில் சேமிப்பை பராமரிக்க முடியும். இந்த ஆண்டு உங்கள் சகோதர சகோதரியிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை மேம்படும். தேவைப்பட்டால், அவர்கள் உங்களுக்கு பண உதவியும் செய்வார்கள். அதனால் உங்கள் உறவு வலுவடையும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வேலையை மிகச் சிறந்த முறையில் மன உறுதியுடன் செய்வதைக் காணலாம் மற்றும் வியாபாரத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து உங்கள் வேலையை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த வருடம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மற்றவரிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள் இல்லையெனில் மனக்கசப்பு ஏற்படலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இந்த சமூகத்திற்கு ஏற்றார் போல அவர்களை மற்றிக் கொள்வார்கள். இந்த வருடமும் நீங்கள் அப்படியே இருப்பீர்கள். நீங்கள் அரசியலில் நுழைந்தால் அதில் வெற்றி பெறலாம். பயணம் செய்ய இந்த ஆண்டு அதிகம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. வேலைகள் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி செல்ல வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் பலனடைய வாய்ப்புள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள். இந்த ஆண்டு பல துறைகளில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தொழிலை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பிப்ரவரி முதல் மார்ச் வரை உள்ள நாட்களில், நீங்கள் ஒரு நல்ல கேஜெட் அல்லது மொபைலை வாங்கலாம். குடும்பத்தில் ஏதேனும் சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், வீட்டில் சில நல்ல செய்திகள் வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. உங்கள் மனதில் உள்ள ஆசைகள் அனைத்து நிறைவேறும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: 2023ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உடல்நலம் மோசமடைய வாய்ப்புள்ளது. இப்போது, உங்கள் வருமானம் அதிகரிப்பதை நீங்கள் காணலாம். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு லாபம் அதிகரிக்கும். அரசாங்கத் துறையிலிருந்து வரும் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல பலன் பெறலாம். ஆண்டின் தொடக்கத்தில், குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் பெரும்பாலும் நன்றாக இருக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். இதன் காரணமாக உங்கள் வேலையில் வெற்றியைப் பெற முடியும். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் உடன்பிறந்தவர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்தலாம். நண்பர்களிடம் கவனமாக இருங்கள், இந்த ஆண்டு உங்கள் நண்பர்களிடம் ஏமாற வாய்ப்புள்ளது. நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால், அதற்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், ரியல் எஸ்டேட்டில் சொத்து வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். சில பூர்வீக சொத்துக்களையும் நீங்கள் அடையலாம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு நீங்கள் பிரபலமானவராக திகழ்வீர்கள்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். உங்கள் புத்திசாலித்தனம் இந்த ஆண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனத்தால் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். இந்த ஆண்டு எல்லா விஷயத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால், வங்கி இருப்பு அதிகரிக்கலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைவாகவே பயணம் செய்வீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் ஆசியுடன் உங்கள் வேலையில் முன்னேற முடியும். உங்களின் எந்த செயலாலும் அவர்களை காயப்படுத்தாதீர்கள். இது உங்கள் வேலையையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். வெளி நாட்டில் வேலை செய்பவராக இருந்தால் இந்த ஆண்டு வீடு திரும்ப வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே இல்லாமல், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் புதிதாக ஒன்றை படிக்க விரும்பினால், இந்த ஆண்டு நீங்கள் அதில் வெற்றியைப் பெறலாம். நீங்கள் நன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல், அதை ஒரு தொழிலாகவும் தொடரலாம். ஆண்டின் நடுப்பகுதியில், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மேலும் மதப் பயணம் செல்வதும் தற்செயலாக அமையும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: டிச.31 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.