1.வடமேற்கு, மத்திய இந்தியாவில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு இந்தியா, மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் இன்றுமுதல் (பிப். 4) நாளைவரையும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் நாளைமுதல் வரும் 6ஆம் தேதிவரையும் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2.’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்தில் தொடங்குகிறார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கும் ஸ்டாலின், பிப்ரவரி 8ஆம் தேதிவரை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்கவுள்ளார்.
3. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2021
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து அதன் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
4. திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் வரை செல்லும் சிறப்பு ரயில் இன்றுமுதல் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
5. இரண்டாவது டெஸ்ட் போட்டி
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது.