தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் வருகை:
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகிறார். மேலும், பல்வேறு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள கரோனா சோதனை:
சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இன்று முதல் அந்தந்த மாவட்டங்களில் கரோனா தொற்று சோதனை நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சி:
அருப்புக்கோட்டையில் இன்று முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகம் வாங்க வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொகரம் பண்டிகை:
இன்று இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு மொகரம் பண்டிகைக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே:
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/11 பயங்கரவாத தாக்குதல்:
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் உள்பட 4 இடங்களில் அல் கைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம் இன்று. இதில் 2,500க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.