மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை
![News Today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12329180_nt-1.jpg)
ஊரடங்கு தளர்வுகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைசெயலகத்தில் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
மின்வாரியப் பணி சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி
![News Today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12329180_nt-2.jpg)
மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மின் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்கிறார்.
இறந்து போன சிறைக் கைதியின் உடலை வாங்க உத்தரவு
![News Today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12329180_nt-3.jpg)
பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த சிறைக்கைதி முத்து மனோவின் உடலை இன்று மாலைக்குள் அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்துமனோவின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
![News Today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12329180_nt-5.jpg)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து இசையமைத்து வரும் 'சிவகுமாரின் சபதம்' படத்திலிருந்து முதல் பாடலான 'சிவகுமார் பொண்டாட்டி' பாடல் இன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹன்சிகாவின் மஹா பட டீசர் வெளியீடு
![News Today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12329180_nt-4.jpg)
நடிகை ஹன்சிகாவின் 50ஆவது படமான 'மஹா' டீஸர் இன்று மாலை வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.