ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11am top News
11am top News
author img

By

Published : Jun 5, 2020, 11:19 AM IST

ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் விரைந்து செயல்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நீர் வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார்.

'சவக்குழி வெட்ட சொல்றாங்க... கொத்தடிமை போல நடத்துறாங்க' - ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த சாதியக் கொடுமை!

"நான் இருளர் இனத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, மூவர் கூட்டாகச் சேர்ந்து ஆதிக்க மனப்பான்மையில், என்னைக் கொத்தடிமை போல் நடத்துகின்றனர். இதுவரை நான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கோ, செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ சென்றதில்லை"

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தி.க. வழக்கு!

சென்னை: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு குறித்து தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!

சென்னை: தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை திடக்கழிவு மேலாண்மையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமமுக நிர்வாகி கொலை வழக்கு: சரணடைந்த 4 பேர்

பெரம்பலூர் : அமமுக நிர்வாகி கொலைக் குற்றவாளிகள் நான்கு பேர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர்.

'என் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு, யாரும் ஆதரவு தரவேண்டாம்'

தனது பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும்; அதற்கு யாரும் ஆதரவு தர வேண்டாம் எனவும் நடிகை அம்பிகா, தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகின் சிறந்த யார்க்கர் பவுலர் மலிங்கா தான்: பும்ரா!

உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் இலங்கை அணியின் மலிங்கா தான் என இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

பெங்களூரு: வெள்ளை நிற மலைபாம்பை (பைதான்) புடலங்காய் போல் அசால்டாக தூக்கிய இளைஞரின் வைரல் காணொலியை காணலாம்.

முதியவர்கள் - சிறுவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்!

டெல்லி: 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் முடிந்தவரை கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீன செயலிகளை நீக்க உதவும் இந்திய செயலியை நீக்கியது ஏன்? கூகுள் விளக்கம்

கூகுளின் கொள்கைகளுக்கு எதிராக வெளியிடப்பட்டதால் சில செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.