ETV Bharat / state

இடைத்தேர்தல்: பாஜகவின் தாமதமான நிலைப்பாடு.! ஈபிஎஸின் நடவடிக்கை என்ன..! - AIADMK banners

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பேனர்களில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடங்கியதில் இருந்து பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளுக்கும் இடையே நடத்ததை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஈரோடு இடைத்தேர்தல்: பாஜகவின் தாமதமான நிலைப்பாடு..! ஈபிஎஸ்சின் நடவடிக்கை என்ன..?

author img

By

Published : Feb 11, 2023, 7:59 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்கியது. குறிப்பாக, பாஜக இறுதி வரை ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என்றே கூறியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டதால் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே பாஜக சார்பில் ஜி.கே. வாசனிடம் பேசி தாமகவை தாமரை சின்னத்தில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அனுப்பி ஜி.கே. வாசனிடம் பேசி அவரையே அதிமுக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட வைத்தார்.

அப்போதிலிருந்தே ஈபிஎஸ் தரப்பில் இடைத் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்தது. அதன்படியே இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஓபிஎஸ் தரப்பினர் ஒருபுறம் நான் தான் உண்மையான அதிமுக என்றும், அதிமுகவின் வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என்றும் அறிவித்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் தேசிய கட்சியான பாஜக போட்டியிட்டால், நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு தருவோம் என்று ஒபிஎஸ் தெரிவித்தார். இதனால் கூட்டணி கட்சியான பாஜக இரட்டை இலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் நல்லது, கிடைக்கவில்லை என்றால் நல்லது என்று பாணியில் தேர்தல் பணிகளை செய்து வந்தனர். ஈபிஎஸ் தரப்பினர் வேட்பாளர் அறிவிப்பு பேனர்கள் ஒட்டினர். அந்த பேனர்களில் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதையும் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர்களில் குறிப்பிட்டு, பாஜகவை கழட்டிவிட திட்டமிட்டது போல் காட்டினர்.

அதிமுகவில் இருந்து பாஜக விலகுகிறதா? என்று பாஜகவினரிடையே கேட்கும் போது, "பேனர்களில் எழுத்து பிழை ஏற்பட்டிருக்கும்" என்று விளக்கம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அன்றே பேனர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பேனர்களில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பேர்களில் மாறி மாறி கூட்டணியின் பெயரை மாற்றியது ஈபிஎஸ் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, இன்னும் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை எடுத்துவிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணி என்று மாற்றம் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதன்பின் பொதுக்குழுவின் மூலம் வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினால் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கூட பாஜகவ தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்கவில்லை. இரட்டை இலை சின்னம் உள்ளவர்களுக்கு ஆதரவு என்று மட்டுமே பாஜக கூறியது.

ஒரு கட்டத்தில், ஈபிஎஸ் வேட்பாளரே பலமான வேட்பாளராக உள்ளார் என்றும், அதனால் ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் பாஜக அறியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படியே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார். அன்று மாலையே இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் தரப்பிடம் சென்றது. அதைத்தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவை கொடுப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் அதிமுகவின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் புகைப்படம் பேனரில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈபிஎஸ் தரப்பின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர், "இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் அதிமுக போட்டியிடுகிறோம் என்று கூறிவிட்டோம். ஆனால், கூட்டணியில் இருந்து கொண்டே இறுதி வரை பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தது.

உச்ச நீதிமன்றத்தை தான் முழுமையாக நம்பி இருந்தோம். இடைத்தேர்தல் தொடர்பான பாஜக நிலைப்பாட்டை இறுதியில் எடுத்ததால் பேனர்களில் கூட்டணி பெயர் எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது ஒன்றும் குழப்பம் இல்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று ஈபிஎஸ் கூறியதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரையில் 43,000-க்கும் அதிகமான சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் இந்த வாக்குகளில் பெரும்பான்மை எதிரணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டும் ஆரம்பம் முதலே அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறாமல் இருப்பதே நல்லது என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு பாஜக ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் குழப்பத்தில் உள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவுச்சாலை ஒருபார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.