ETV Bharat / state

அனைவருக்கும் சமமான கல்வி முறை: ஜி-20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் சஞ்சய் மூர்த்தி முடிவு

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க ஜி-20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளததாக மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி கூறியுள்ளார்.

அனைவருக்கும் சமமான கல்வி முறை:ஜி-20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் சஞ்சய் மூர்த்தி முடிவு

author img

By

Published : Feb 2, 2023, 10:57 PM IST

சென்னையில் நடைபெற்ற முதலாவது ஜி-20 கல்வி பணிக்குழுவின் கூட்டத்தில் 30 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி: உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பற்றிய சிறந்த நடைமுறைகள் மிகப்பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

இந்த 2 நாள் கூட்டத்தில் யுனிசெஃப் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறுப்புநாடுகள் சந்திக்கும் கல்விச் சவால்களும் எதிர்கொண்டு நிலையான நீண்ட தீர்வுகளைக் கண்டறிய, எதிர்கால பணிச்சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றல் திறனை மேம்படுத்தவது உள்ளிட்ட முக்கிய இலக்குகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள பிரதிநிதிகள் ஆர்வம் காட்டினர்.

அனைவரையும் உள்ளடக்கிய சமமான, பொருத்தமான, தரமானக் கல்வி மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் ,3 கல்வி பணிக்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள கடைசி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும்.

சென்னை ஐஐடி பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது என தெரிவித்தார். இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் கூறும்போது, பள்ளி அளவில் எழுத்தறிவை வலுப்படுத்தும் வழிமுறைகள், மேலும் கல்வியை வலுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்கள் குறித்து விரிவான விவாதம் பிரதிநிதிகளால் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

உறுப்பு நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தெரிந்துகொள்ளும் தளமாக பணிக்குழு விளங்கியது. தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் பள்ளிக்கல்வி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்களுக்கான தேவைக்கு குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு சில நாடுகள் ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சூழல் உள்ளதாகவும், சில நாடுகளில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே தேவைக்கும், உள்ள நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 50 சதவீதம் பள்ளிக் குழந்தைகள் வரும் காலத்தில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இந்தத் திறமைகளை உருவாக்குவதற்கும், அங்கீகாரம் அளிப்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். திறன்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு ஒரு செயல் திட்டம் வகுக்கப்படும். தீக்ஷா தளம் மற்றும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களை உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் பாராட்டினர்.

இந்த கூட்டத்தின் முடிவுகள் ஆவணப்படுத்தப்பட்டு, இது குறித்த விவாதம் அமிர்தசரஸ் நகரில் மார்ச் 15 முதல் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முன்வைக்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் 56-க்கும் மேற்பட்ட ஜி-20 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்புகளை இந்தக் கூட்டங்கள் ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞன் to முடிதிருத்துநர் - ஒரு நம்பிக்கை கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.