ETV Bharat / state

பொய் செய்தி பரப்பும் முதலமைச்சர்: இபிஎஸ் குற்றச்சாட்டு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மதனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது வெள்ளநீர் தேங்கவில்லை என முதலமைச்சர், அமைச்சர்கள் பொய்யான செய்தியை தெரிவித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த இபிஎஸ் பேட்டி

author img

By

Published : Nov 14, 2022, 2:19 PM IST

சென்னை: மதனந்தபுரம், ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே மிக கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் குளம் போல் தேங்கி இன்னும் வடியாமல் இருக்கின்றது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அதோடு இன்று (நவ. 14) காலையில் இருந்து இப்போது வரை நான் பல இடங்களுக்கு சென்று பார்த்தேன்.

விடியா திமுக அரசு சென்னை மாநகர பகுதியில் ஒரு சொட்டு நீர்கூட தேங்கவில்லை என கூறிவருகிறது. என்னோடு வந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அதில் எந்த அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது என்பது பதிவாகியுள்ளது. வெள்ளநீர் தேங்கவில்லை என முதலமைச்சர், அமைச்சர்கள் பொய்யான செய்தியை தெரிவித்து வருகிறார்கள். சென்னை மாநகர பகுதியில் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது என பொய்யான தகவலை அவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 500 வீடுகள் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் உள்ளனர். மதனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். சில திமுக அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் மழையின்போது மக்கள் படகில் வந்தனர் என்று கூறி வருகின்றனர். தற்போது தான் மக்கள் படகில் சென்று வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் கூட அமைக்கப்பட வில்லை. பொதுமக்கள் தங்குவதற்கு முகாம் அமைக்கப்படவில்லை. நிவாரண பொருட்கள் வீட்டிற்கு சென்று வழங்கப்படவில்லை. உடனடியாக போர்கால அடிப்படையில் வெள்ளநீரை வெளியேற்ற விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையும் படிங்க: மழை இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.