ETV Bharat / state

மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஆசிரியர்கள் கூறுவது என்ன? - stalin

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை அகற்றி, பள்ளிகளில் முழுவதும் கற்பிக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களுக்காண  'எண்ணும் எழுத்தும்’ திட்டம் ஆசியிர்கள் கூறுவது என்ன?

author img

By

Published : Jun 13, 2022, 10:48 PM IST

சென்னை: ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல், வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக, ’எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 13) தொடங்கி வைத்தார். கரோனா காலகட்டத்தில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது.

அதனை களைந்திடும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திறனை வளர்க்கும் வகையில், அரும்பு, மொட்டு, மலர் என்று மூன்று படிநிலைகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

’அரும்பு’ என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்கப்படும். ’மொட்டுகள்’ என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துகளை மாணவர்கள் வாசிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படும். ’மலர்’ என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தலைப்புகளில் இருந்து ஆடல், பாடலுடன் கற்பிக்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்பாட்டுடன் கல்வி கற்பிக்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்’ திட்டம் ஆசிரியர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர் மார்ஸ் கூறும்போது, ' ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினால் மாணவர்கள் 2025க்குள் முழுவதும் வாசிக்கும் திறனை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தினை பயன்படுத்தி அரும்பு, மாெட்டு, மலர் என்ற நிலையில் கற்பிக்கப்பட உள்ளது. கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஜாபர்கான்பேட்டை சென்னை தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை ஜாப்லின் ஜெயகுமாரி கூறும்போது, ‘மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ஆடல் பாடலுடன் கல்வி கற்பிக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் கல்வியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வியும் அளிக்கப்படும்’ எனத் தொிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்; மாணவர்கள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.