ETV Bharat / state

எண்ணூரில் 7 கிராம மீனவ மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்! - கடலில் கலக்கும் எண்ணெய் கழிவுகள்

சென்னை: எண்ணூர் பகுதியில் உள்ள ஏழு கிராம மீனவர்கள் முகத்துவாரம் பகுதியை தூர்வாரக்கோரி கடலில் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Sep 30, 2020, 11:33 PM IST

சென்னை எண்ணூர் பகுதியில் வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதால் அப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது.

அதேபோன்று காமராஜர் துறைமுகம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகளால் முகத்துவாரம் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு கடலும் ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும்போது படகுகள் தரைதட்டி சேதமடைந்து உயிரிழப்பு ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முகத்துவாரம் பகுதியை தூர்வாரக்கோரி அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கைவைத்து-வருகின்றனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எண்ணூரில் மீனவர்கள் போராட்டம்

இந்நிலையில், துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகளைக் கட்டுப்படுத்த கோரியும், மாநில அரசின் அலட்சியப்போக்கை கண்டித்தும் எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.