சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதிவரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில பொறியியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் பொறியியல் தேர்வினை எழுதும் இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கும், தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளதாகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி இளநிலை, அரியர் மாணவர்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு, மார்ச் 2ஆம் தேதிக்கும், பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு மார்ச் 3ஆம் தேதிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொலைநிலைக் கல்வியில், பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 9ஆம் தேதிக்கும், 21ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 10ஆம் தேதிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 21இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகள்: ஜூன் 5இல் முடிவுகள்