ETV Bharat / state

பொறியியல் கல்வி கட்டண நிர்ணயக் குழு ஆசிரியர், பெற்றோர், வருமான வரித்துறை கருத்துக்களை பெற கோரிக்கை! - இன்றைய சென்னை செய்திகள்

சென்னை: பொறியியல் கல்விக் கட்டண நிர்ணயக் குழு ஆசிரியர், பெற்றோர், வருமான வரித்துறை கருத்துக்களைப் பெற வேண்டும் என, அகில இந்தியத் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறியியல் கல்வி கட்டண நிர்ணைய குழு ஆசிரியர், பெற்றோர், வருமான வரித்துறை கருத்துக்களை பெற கோரிக்கை!

author img

By

Published : May 12, 2020, 9:35 PM IST

இதுகுறித்து இந்திய தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கல்லூரிகளின் கட்டண நிர்ணயிப்புக் குழு அமைத்துள்ளது.

கடந்த 4, 5ஆம் தேதிகளில், அந்தக் கட்டண குழு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி வரவு, செலவு கணக்குகளை எடுத்துக்காட்டி, தங்களுக்குத் தேவையான கல்விக் கட்டணத்தை சிபாரிசு செய்யக் கேட்டுள்ளது. தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் பிற கல்லூரிகளை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஊதியம் சரியாகக் கொடுப்பதில்லை.

கொடுத்தாலும் மிக குறைவாகவே கொடுக்கப்படுகிறது. ஆனால், அரசு, வருமான வரி அலுவலகம் முன்பு காண்பிக்கப்படும் கணக்குகள் பன்மடங்கு உயர்த்தி காட்டப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் வருமான வரித்துறையானது, தமிழ்நாட்டைச் சார்ந்த 3 தனியார் கல்வி நிறுவனங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கில் வராத சொத்து குவிப்பை கண்டுப்பிடித்துள்ளது.

மேலும் கரோனா நெருக்கடியிலும் பல கல்லூரிகள் ஆசிரியருக்கு சில பல மாத ஊதிய பாக்கி வைத்துள்ளன. ஆதலால், கட்டண நிர்ணயக் குழுவானது, வருமான வரித்துறை அலுவலகத்தைக் கணக்குகளை சரிபார்க்க அழைக்க வேண்டும். மேலும், இக்குழுவானது பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் கருத்து பெற வேண்டும்.

கட்டண நிர்ணயக் குழுவின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், என்னவென்று கொடுக்கப்படவில்லை. அவற்றை வெளியிட வேண்டும். ஒரு சார்பாக கல்லூரி முதலாளிகளை மட்டும் கேட்டு மாணவரின் கல்விக் கட்டணத்தை முடிவு செய்யக்கூடாது. அது, ஜனநாயகத்திற்கு எதிரானது.

குழுவின் கூட்டங்கள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.