சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இதர 28 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் தற்செயல் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும், அக்டோபர் 9ஆம் தேதியும், பல்கலைக்கழகம், வளாகக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள் என அனைத்துக்கும் விடுமுறை என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.