ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர ஜூலை 31ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்

author img

By

Published : Jul 30, 2020, 12:32 AM IST

சென்னை: பொறியியல் படிப்பில் சேர ஜூலை 31ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பிற்கு வரும் 31ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக ஜூலை 15ஆம் தேதி முதல் பெறப்பட்டுவருகிறது. இதில் மாணவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து எட்டு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தினைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 93 ஆயிரத்து 383 மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குறித்த சந்தேகங்களைத் தொலைபேசி மூலம் 1,768 மாணவர்களும், மின்னஞ்சல் மூலமாக 1,556 மாணவர்களும் கேட்டு விளக்கம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019ஆம் ஆண்டு விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாக நடைபெற்றது.

சரிபார்ப்பு மேற்கொள்வதற்காக மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களுக்கு நேரடியாக வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்தாண்டு கரோனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ் பதிவேற்றம் ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் அவர்களின் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு வரிசை எண்களின் அடிப்படையில் இரண்டு நாட்களில் 20,000 மாணவர்கள் வீதம் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் அவர்களுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் பதவியின் அடிப்படையில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிய விண்ணப்ப எண் 200001 முதல் 220000 வரையிலும், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை விண்ணப்ப எண் 220001 முதல் 240000 வரையிலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விண்ணப்ப எண் 240001 முதல் 260000 வரையிலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் விண்ணப்ப எண் 260001 முதல் 280000 வரையிலும், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 9ஆம் தேதியில் விண்ணப்ப எண் 280001 முதல் 300000 வரையிலும், ஆகஸ்ட் 10 முதல் 11ஆம் தேதிடுக் விண்ணப்ப எண் 300001 முதல் 320000 வரையிலும் பதிவேற்றம் செய்யலாம்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விடுபட்ட மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நாட்களில் சான்றிதழ் பதிவுசெய்து கொள்ள முடியாதவர்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22351014,22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சரிபார்ப்பிற்கு நேரில் வரத் தேவையில்லை. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களை அனுபவம் வாய்ந்த பேராசிரியருக்கு மூலம் அந்தந்த தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை சரிபார்க்கப்படும். மாணவர்கள் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த பின்னர் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சென்னை பெண்களிடம் செயின் பறிப்பு - கொள்ளை கும்பல் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.