கடந்த 2013ஆம் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்க ஜெயலலிதா அரசு தடைவிதித்தது. இதனிடையே, கடந்த 2016ஆம் ஆண்டு மதுரவாயலில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது, அங்கு ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில், அமைச்சர்கள், மூத்த காவல் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தாக குட்கா வியாபாரி மாதவராவ் குறிப்பிட்ருந்தார். இதுகுறித்து வருமான வரித் துறையினர் தலலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கபட்டது. அதனடிப்படையில், குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அமைச்சர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் காவல் தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், டி.கே.ராஜேந்திரன் டிசம்பர் 2ஆம் தேதியும், கூடுதல் ஆணையர் தினகரன் டிசம்பர் 3ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அனுப்பி உள்ள சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: