நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. ஒரே நாளில் 3 லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா தொற்றாளர்களுக்கு தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது.
எனவே ஆக்சிஜன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டொ்லைட் ஆலையை 3 மாதங்களுக்கு மட்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கூடுதலாகத் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க காலி கண்டெய்னர்கள் மூலம் 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள் பிரிட்டனிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் சென்னை வந்தன.
இதையும் படிங்க: ’பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே’- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு