சென்னை: சத்தியபாமா வேலை வாய்ப்பு முகாம் 2022 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை நிறுவனத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி ஆகியோர் வழங்கினர்.
காஃக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ரமேஷ் தனக்கோட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 92.14 சதவீதம் மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தம் 2004 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 363-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து கல்லூரிக்கு வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.
இந்த 363 நிறுவனங்களில் புதிய உச்சமாக 401 மாணவர்கள் 4.75 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.வேலைவாய்ப்பு வளாகத்தேர்வில், மாணவர்களுக்கு கிடைத்த உச்ச ஊதியம், ஆண்டுக்கு 31 லட்சமாகவும், சராசரி ஆண்டு ஊதியம் 4.75 லட்சம் என கிடைத்துள்ளது.
புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன. தொழில் நிறுவன உறவுகளில் சத்யபாமாவின் கூட்டு அணுகுமுறை மூலம் HCL and Capgemini நிறுவனங்கள் 300 மாணவர்களுக்கு பணி வழங்கியுள்ளது. பல்வேறு முன்னணி தொழில்நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியது.
இதையும் படிங்க:என் தந்தையை பாஜகவினர் ஏமாற்றிவிட்டனர்- உத்தவ் தாக்கரே!