ETV Bharat / state

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: தனியார் பள்ளிகள் 99.35% தேர்ச்சி - அரசு பள்ளிகளில் தேர்ச்சி வீழ்ச்சிக்கு என்ன காரணம் ?

author img

By

Published : Jun 27, 2022, 1:19 PM IST

பிளஸ் 1 தேர்வில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சுமார் 99 விழுக்காடாக உள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்த பார்க்கலாம்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: தனியார் பள்ளிகள் 99.35% தேர்ச்சி - அரசு பள்ளிகளில் தேர்ச்சி வீழ்ச்சிக்கு என்ன காரணம் ?
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: தனியார் பள்ளிகள் 99.35% தேர்ச்சி - அரசு பள்ளிகளில் தேர்ச்சி வீழ்ச்சிக்கு என்ன காரணம் ?

சென்னை: பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன்.27) வெளியானது. இந்த தேர்வை எழுதிய 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேரில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.0 7 சதவீதமாக உள்ளது. தேர்வில் மாணவர்களை விட மாணவியர்கள் 10.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இரண்டாம் இடத்தை விருதுநகர் மாவட்டம் 95.54 சதவீதம் பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் 95.25 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் ஒரு மாணவர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பதினோராம் வகுப்பு தமிழ் பாடத்தில் 18 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர். அரபிக் பாடத்தில் 10 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

மேலும், கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 மாணவர்களில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 160 பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் 96.04 எனப் பதிவாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தேர்வு முடிவுகளில் அந்த ஆண்டைவிட 6% தேர்ச்சி குறைந்துள்ளது.

2605 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதேபோல் 103 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளி வாரியாக தேர்வு எழுதியவர்களில் அரசு பள்ளிகளில் 83.27 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.65 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.35 சதவீதமும், இரு பாலர் பள்ளிகள் 90.44 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.90 சதவீதமும், ஆண்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 78. 48 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்

  • இயற்பியல் - 94.55 சதவீதம்
  • வேதியியல் - 94.42 சதவீதம்
  • உயிரியல் - 95.99 சதவீதம்
  • தாவரவியல் - 87. 98 சதவீதம்
  • விலங்கியல் - 87.96 சதவீதம்
  • கணினி அறிவியல் - 98. 90 சதவீதம்
  • வணிகவியல் - 88.43 சதவீதம்
  • கணக்குப்பதிவியல் - 87. 91 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100% மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரம்

  • தமிழ் மொழிப் பாடத்தில் 18 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
  • அரபிக் பாடத்தில் 10 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
  • இயற்பியல் பாடத்தில் 7,14 மாணவர்கள்
  • வேதியியல் பாடத்தில் 1,38 மாணவர்கள்
  • உயிரியல் பாடத்தில் 3,83 மாணவர்கள்
  • கணிதம் பாடத்தில் 8,15 மாணவர்கள்
  • தாவரவியல் பாடத்தில் 3 மாணவர்கள்
  • விலங்கியல் பாடத்தில் 16 மாணவர்கள்
  • கணினி அறிவியல் பாடத்தில் 8,73 மாணவர்கள்
  • வணிகவியல் பாடத்தில் 8,21 மாணவர்கள்
  • கணக்குப்பதிவியல் பாடத்தில் 2,163 மாணவர்கள்
  • பொருளியல் பாடத்தில் 6,37 மாணவர்கள்
  • கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2,186 மாணவர்கள்
  • வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 2,91 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் 4 ஆயிரத்து 470 பேர் இவர்களில் 3,899 பேர் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். அதேபோல் சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய 99 சிறைவாசிகளில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.90 சதவீதம் என உள்ளது.

பதினோராம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதம்

பொதுத் தேர்விற்கு பதிவு செய்த மாணவர்களில் 40 ஆயிரத்து 366 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 4.67 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் 10,677 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அப்போது, தேர்வு எழுத வராதவர்களின் சதவீதம் 1.29 சதவீதமாக இருந்தது.

துறைவாரியான பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஆதிதிராவிடர் நலத் துறையில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 75.54 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தில் உள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 99.35 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியினர் மலைவாழ் பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களின் 82.10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்

  • பதினோராம் வகுப்பு தேர்வில் 591 மதிப்பெண்களுக்கு மேல் 187 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
  • 581 முதல் 590 வரை 1,682 மாணவர்கள் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
  • 571 முதல் 580 வரை 3,052 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
  • 551 முதல் 570 வரை 8,758 மாணவர்கள் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
  • 300 மதிப்பெண்களுக்குக் குறைவாக 3 லட்சத்து 55 ஆயிரத்து 222 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எழுதாமல் நேரடியாக பதினோராம் வகுப்பில் முதல் முறையாக பொதுத் தேர்வை எழுதியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடி தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பயிலலாம். மேலும், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு என அனைத்து வகுப்பிலும், பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.