தமிழ்நாட்டில் முதுமலை, ஆனைமலை, வண்டலூர், திருச்சி, சாடிவயல், குரும்பபட்டி உள்ளிட்ட ஆறு இடங்களில் 62 யானைகள் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு முதல் யானைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 48 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த முகாமிற்காக வனத் துறை சார்பில் 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு 52 யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப் எச்சரிக்கை