ETV Bharat / state

'மனித - யானை மோதல்களை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்' - திண்டுக்கல் சீனிவாசன் - தமிழக சட்டப்பேரவை

சென்னை: "மனித - யானை மோதல்களுக்கு தீர்வு காண தொலை உணர்வு கருவிகள் அமைக்கப்படும்" என்று, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

dindigul srinivasan
author img

By

Published : Jul 1, 2019, 6:47 PM IST

தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது,

மனித - யானை மோதல்களை கட்டுப்படுத்தும் விதமாக வனப்பகுதியில் இருந்து மனித வாழ்விடங்களில் புகும் யானைகளை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு கொண்ட தொலைதூர கட்டுப்பாட்டு தெர்மல் கேமரா, கண்காணிப்பு படப்பிடிப்புக் கருவி, கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு ஆகியவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.7.24 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

சுற்றுச்சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வனவிலங்கு ஆய்வுகள் மற்றும் சோலை பற்றிய விழிப்புணர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம், வன உயிரின ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக முதன்மை நிறுவனமாக வண்டலூரில் நிறுவப்பட்ட இலக்கை அடைய பாடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வன உயிரின தடயவியல் பிரிவிலும் மற்றும் வனவிலங்குகள் ஆரோக்கியத்தில் தரமான ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் வனத்துறையில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கும் மற்றும் பிற துறை சார்ந்த பணியாளர்களுக்கும் வனவிலங்கு குற்றவியல் புலனாய்வு பற்றிய பயிற்சியும் அளிக்கிறது.

இந்த நிறுவனமானது ஒரு மாதம் குறுகிய கால பயிற்சிகளை தற்சமயம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கால சவால்களை மேற்கொள்வதற்காக இந்த நிறுவனத்தில் வன உயிரின பாதுகாப்பு மேலாண்மைக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால சான்றிதழ் படிப்புகளை வழங்கிட உத்தேசித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறது, என்று தெரிவித்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.