சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே இன்று (பிப்.25) காலை சுமார் 6 மணியளவில் தாம்பரம்- பீச் ரயில் வழித்தடத்தில் உள்ள ஓவா் ஹெட் எலட்ரிக் ஒயா் (O H E) அறுந்தது. இதனால் அந்த நேரத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது.
அதனை சரி செய்யும் பணி தாமதம் ஆனதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டது. பின்னர் மின் பராமரிப்பு ஊழியா்கள் பழுதை சரிபார்த்ததும் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த பழுதை சீர் செய்யும் இடைபட்ட நேரத்தில் செய்யபட்ட மின்சார ரயில் தடம் மாற்றம் குறித்து முறையான அறிவுப்புகள் வழங்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியதோடு ரயில் நடை மேடைகளில் செய்வதறியாமல் கூட்டம் கூட்டமாக காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நெடுந்தொலைவு மின்சார ரயில்