ETV Bharat / state

தேர்தல் பாதுகாப்பு பணி: சென்னை வந்த துணை ராணுவத்தினர்!

சென்னை: தேர்தல் பணிக்காக மங்களூருவிலிருந்து 92 மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

asstmilitary
asstmilitary
author img

By

Published : Feb 25, 2021, 4:06 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ரயில் மூலமாக துணை ராணுவப் படையினர் சென்னை வந்தடைய உள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் வீதம், 4,500 பேர் இடம்பெற்றிருப்பார்கள். சென்னையில் 12 துணை ஆணையர்களின் கீழ் 12 கம்பெனி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

துணை ராணுவம் வருகை

இந்நிலையில், இன்று (பிப்.25) முதற்கட்டமாக தமிழ்நாடு தேர்தல் பணிக்காக மங்களூருவிலிருந்து 92 மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். சென்னை வந்த துணை ராணுவத்தினரை தமிழ்நாடு காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ள இரண்டு பேருந்துகள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 27ஆம் தேதி மணிப்பூரிலிருந்து ரயில் மூலமாக துண ராணுவ படையினர் சென்னை வரவுள்ளனர். இதற்கான ரயில் மணிப்பூரிலிருந்து ஏற்கனவே புறப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் பணிக்காக துணை ராணுவம் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.