ETV Bharat / state

தேர்தல் முடிவுகள்: சென்னை மண்டலத்தின் கடந்த கால வரலாறு - Tamilnadu election

தமிழ்நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு எழுதப்போவது யார் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். இதற்கு முன் இரண்டு கழகங்களும், மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை முறை வென்றிருக்கின்றன?

dfas
das
author img

By

Published : May 2, 2021, 7:24 AM IST

ஜனநாயகத் திருவிழாவான தேர்தலின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டோம். தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மக்கள் தற்போதைய காபந்து அரசுக்கே மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்களா, அல்லது புதிய தலைமையை விரும்பியிருக்கிறார்களா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.

மக்களை வசீகரிக்கும் முகங்களாக இருந்து வந்த கருணாநிதி., ஜெயலலிதா இல்லாமல், முதலமைச்சர் வேட்பாளர்களை, புதிய முழக்கங்களை முன்மொழிந்து நடந்திருக்கும் இந்தத் தேர்தலில் முடிவுகள் என்னவாகவும் இருக்கலாம்.

dsaf
das

தமிழ்நாடு - 2021 தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரும் அதே வேளையில், முந்தைய தேர்தல்களில் கட்சிகளின் வெற்றி தோல்வி வரலாற்றையும் வாசகர்களுக்கு தருகிறது ஈடிவி பாரத் தமிழ்நாடு.

இந்தியா குடியரசு ஆனப் பின்னர், 1952ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது. அப்போதிருந்த ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் 1957, 62 ஆகிய ஆண்டுகளில் இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களை மெட்ராஸ் மாகாணம் சந்தித்திருக்கிறது.

1965ஆம் நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பில் மாநிலத்தில் 234 தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர் நடந்த 1967ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வென்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு தமிழ்நாடு என மாற்றியது.

dsaf
dsaf

தமிழ்நாட்டில் தேசிய அலை ஓய்ந்து காங்கிரஸிடமிருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டான 1967 -ல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பின்னோக்கியப் பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்குகளை புரிந்து கொள்ளவதற்காக தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்கள் மண்டல வாரியாக இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா, ஆகிய நான்கு மண்டலங்களுடன் சென்னை தனி மண்டலமாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மண்டலம்:

மாநிலத்தின் வடகிழக்கு ஓரத்தில் அமைந்துள்ளது சென்னை மண்டலம். தமிழ்நாட்டின் தலைநகரமாக இருப்பதோடு மட்டும் இல்லாமல், தொழிற்பேட்டைகள், வளர்ந்து வரும் நகரங்களையும் உள்ளடக்கியிருக்கிறது இந்த மண்டலம். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், சென்னையின் பகுதிகளாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் பூவிருந்தவல்லி(தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய ஆறு தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் தொகுதிகளுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆலந்தூர் தொகுதியும் சென்னை மண்டலமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பறவை பார்வை:

சென்னை மண்டலத்தில் உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய 10 தொகுதிகள் 2011ஆண்டில் உருவாக்கப்பட்ட தொகுதிகள். இந்தத் தொகுதிகள் இதுவரை தலா இரண்டு பேரவைத் தேர்தல்களையே சந்தித்துள்ளன.

இப்புதிய தொகுதிகளில் ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் அதிமுகவும், கொளத்தூர், சேப்பாக்கம் தொகுதிகளில் திமுகவும் தங்கள் வசம் வைத்துள்ளன.

dsaf
dsaf

மாதவரம், திரு.வி.க.நகர், வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய 5 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன. விருகம்பாக்கம் தொகுதி வெற்றியை தேமுதிகவுடனும், மதுரவாயல் தொகுதியை சிபிஎம்- வுடனும் அதிமுக பகிர்ந்துள்ளது.

1967க்கு பின்னர் நடந்துள்ள 12 சட்டப்பேரவை தேர்தல்களில், வில்லிவாக்கம், மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகளில் 4 முறையும், தாம்பரம் திருவொற்றியூர் தொகுதிகளில் 6 முறையும், அண்ணாநகர், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு தொகுதிகளில் தலா 8 முறையும், துறைமுகம் தொகுதியில் 9 முறையும், எழும்பூர் தொகுதியில் 10 முறையும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவைப் பொறுத்த வரையில் சென்னை மண்டலத்தில், திருவொற்றியூர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, தி.நகர், தொகுதிகளில் 4 முறையும், மயிலாப்பூர் தொகுதியில் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ராயப்பேட்டை தொகுதியில் இதுவரை நடந்த 10 பேரவைத் தேர்தல்களில் இரு பெரும் கட்சிகளும் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன.

கடந்த தேர்தல் நிலை:

தமிழ்நாட்டின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் உள்ள 26 தொகுகிகளில், 16 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று சென்னை திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்தது. அதிமுக, 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

சென்னை மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பதை உணர்த்துகிறது இந்தத் தேர்தல் வரலாறுகள்.

மாநிலத்தின் தலைநகராகவும் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடமாக சென்னை இருப்பது, அரசு ஊழியர்கள், சென்னையின் பூர்வகுடிகள், தொழிற்சங்கங்கள், சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் கொண்டிருப்பதாலும் திமுக இங்கு தனது தடத்தை வலிமையாக வேரூன்றியுள்ளது. ஆர்.கே. நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் மட்டுமே அதிமுக அதிகமுறை அதாவது 6 முறை வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி எல்லா தொகுதிகளிலும் திமுகவே கோலோச்சியிருக்கிறது.

dsaf
dsaf

திமுகவின் எஃகு கோட்டை சென்னை என்ற வரலாற்றை தகர்த்து, உண்மையை மாற்றும் வலிமை காலத்திற்கு உண்டு என உணர்த்தியிருக்கிறது 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததுபோல சென்னை தனது கோட்டை என்ற அந்தஸ்தையும் திமுக இழந்தது.

ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்தது போலான 1991ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் தோல்விக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அக்கட்சி பெற்ற ஆறுதல் வெற்றிகளையும் சென்னைக்குட்பட்ட இரண்டு தொகுதிகளே கொடுத்தன. ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் மனநிலையிலிருந்து மாறுபட்டு, துறைமுகம் தொகுதி கருணாநிதியையும், எழும்பூர் தனித் தொகுதி பருதி இளம்வழுதியையும் தங்களின் உறுப்பினர்களாக பேரவைக்குள் அனுப்பி வைத்தன.

சென்னை மண்டல வரலாறு

தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் என்ற கருணாநிதியின் சாதனையையும், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எழும்புர் தொகுதியை அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை என்ற வரலாற்றையும் இந்த இருவரின் வெற்றி உறுதி செய்தது. 1991ஆம் ஆண்டு தேர்ந்தேடுத்த எழும்பூர் மக்கள் அதே பருதியை 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவிடம் தோல்வியடையச் செய்தது அடுத்த வரலாறு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.