சென்னை: தமிழ்நாடு முழுவதும் நவம்பரில் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்;
17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் 18 வயதை அடைந்தபின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தாமல் ஏரியில் கலெக்டர் ஆய்வு - கிராமப்புற ஏரிகளை கண்காணிக்க குழு!