ETV Bharat / state

காரில் கொண்டுசெல்லப்பட்ட 5.66 கோடி ரூபாய் பறிமுதல்! - காரில் கொண்டுசென்ற பணம் பறிமுதல்

சென்னை: அடையாறில் காரில் கொண்டுசெல்லப்பட்ட ஐந்து கோடியே 66 லட்சம் ரூபாய் பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.66 கோடி பறிமுதல்

author img

By

Published : Mar 30, 2021, 10:48 PM IST

சென்னை வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட அடையாறு அவென்யூ, இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் சீல்வைக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெட்டிகளில் ஐந்து கோடியே 66 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கார் ஓட்டுநர் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், சிஎம்எஸ் (பணம் மேலாண்மை சேவை) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ், நங்கநல்லூர், தாம்பரத்திலுள்ள ஜிஆர்டி நகைக்கடையிலிருந்து ஒப்படைக்கப்பட்ட பணத்தினை அடையாறிலுள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும், அதற்கான ரசீதும் வைத்திருந்தார். சீல் வைக்கப்பட்ட பெட்டிகளைத் திறந்து காட்ட முடியாததால், வாகனத்துடன் தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இது குறித்து வருமானவரித் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பெட்டியை ஆய்வுசெய்த பிறகே திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வருமானவரித் துறை அலுவலர்கள் வர தாமதமானால் பணத்தை நந்தனம் கருவூலத்தில் ஒப்படைக்கவுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் பணம் நிரப்பச் சென்ற வாகனம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.